நடிகர் டி.ராஜேந்தர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சினிமா பிரபலங்களின் வீடுகள், கோர்ட்டுகள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
நடிகர் டி.ராஜேந்தர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், செய்தி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள், கோர்ட்டுகள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முன்னதாக நேற்று, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இந்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் டி.ராஜேந்தர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com