பிரபலங்கள் வீடுகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்


பிரபலங்கள் வீடுகளுக்கு தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
x
தினத்தந்தி 13 Nov 2025 12:53 PM IST (Updated: 13 Nov 2025 1:42 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story