ரத்னகுமாரின் புதுப்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளியீடு

ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
சென்னை,
2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கி உள்ளார். மேலும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு 29 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






