ஹீரோக்களுக்காகத்தான் படம் எடுக்கிறார்கள்...கவர்ச்சிக்கு மட்டும்தான் ஹீரோயின்கள் - ரஜினி பட நடிகை காட்டம்

சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசினார்.
Do you only make films for heroes...? - Rajinikanth actress
Published on

சென்னை,

நடிகை ராதிகா ஆப்தே அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இவர் ரஜினியின் கபாலி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், படங்களில் கதாநாயகிகளுக்கு எதிரான பாகுபாடு பற்றி அவர் பேசினார். பல நேரங்களில், ஹீரோக்களை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதப்படுகின்றன எனவும் கதாநாயகிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

அவர் கூறுகையில், ஹீரோக்களுக்காக மட்டும்தான் படங்கள் எடுக்கிற மாதிரி தெரியுது. ஏன்னா, முழு படமும் ஹீரோவைப் பத்தித்தான். ஹீரோயின்களுக்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஹீரோக்களுக்காகத்தான் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹீரோயின்கள் கவர்ச்சியைக் காட்டத்தான் இருக்காங்க என்றார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com