துல்கர் சல்மானின் 41-வது பட பூஜை


துல்கர் சல்மானின் 41-வது பட பூஜை
x

ரவி நெலாகுடிடி இயக்கத்தில் உருவாகும் துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து "தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான "சீதா ராமம்", 'லக்கி பாஸ்கர்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இவர் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது படப்பிடிப்பை நடிகர் நானி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். ரவி நெலாகுடிடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story