'டிவிகே, டிவிகே' என ஆர்ப்பரித்த ரசிகர்கள்... அடுத்த நொடி விஜய் செய்த செயல்

நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.
சென்னை,
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடந்து வருகிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவிற்கு ரசிகர்கள் கரகோசத்துடன் நடிகர் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார்.அதன்பின்னர் விஜய் ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு சென்றார்.
அப்போது ரசிகர்கள், டிவிகே, டிவிகே (Tamilaga Vettri Kazhagam, தமிழக வெற்றிக்கு கழகம்) என ஆர்ப்பரித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி இங்கு 'டிவிகே' கோஷம் வேண்டாம் என விஜய் சைகை செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
In JN ️ Audio Launch ❤️❤️
— Thalapathy (@ThalapathyShade) December 27, 2025
TVK Brand Aagi Romba Naal Aachu Thalaiva @TVKVijayHQ#JanaNayaganAudioLanuch pic.twitter.com/nYH4WV163U






