மகள் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு - இளையராஜா அறிவிப்பு


மகள் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு -  இளையராஜா அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2025 8:47 PM IST (Updated: 1 Nov 2025 8:49 PM IST)
t-max-icont-min-icon

மகள் பவதாரணியின் பெயரில், மகளிர் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

சென்னை,

இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா... மஸ்தானா... பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி உயிரிழந்தார். ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story