வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகள்...சாதனை படைத்த ஜன நாயகன் பட ''பர்ஸ்ட் ரோர்''


Jana Nayagans First Roar crosses 1 million views in 15 minutes
x
தினத்தந்தி 22 Jun 2025 6:55 AM IST (Updated: 23 Jun 2025 2:40 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

சென்னை,

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ''ஜன நாயகன்'' படத்தின் பர்ஸ்ட் ரோர் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரியல் டைம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

1 More update

Next Story