சம்பளம் குறித்து மனம் திறந்த ஜனநாயகன் பட நடிகை


Janyayan actress opens up about salary
x

நடிகை பிரியாமணி, சம்பளம் குறித்து மனம் திறந்து பேசினார்.

சென்னை,

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியாமணி, சம்பளம் குறித்து மனம் திறந்து பேசினார். அவர் பேசுகையில்,

"பிரபலங்களின் மார்கெட் அடிப்படையில் சம்பளம் கேட்பதும், பெறுவதும் தவறில்லை. தகுதியான சம்பளம் கிடைப்பது நியாயமானதுதானே?. எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் அது என்னை பாதிப்பதில்லை. என் மதிப்பு என்னவென்று எனக்கு தெளிவாக தெரியும். எனக்கு தகுதியான சம்பளத்தைதான் கேட்பேன். அதிகமாக கேட்க மாட்டேன்" என்றார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். அதைத் தொடர்ந்து மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story