ரஜினிகாந்துடன் இணைவதை உறுதிப்படுத்திய கமல்ஹாசன்

லோகேஷ் படத்தில் ரஜினிகாந்துடன் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சென்னை,
கமல்ஹாசன் -ரஜினிகாந்த் ஆகியோர் மீண்டும் இணையப்போகின்றனர் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இது வெறும் செய்தியாக தான் இருந்ததே தவிர அதிகாரபூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், லோகேஷ் படத்தில் ரஜினிகாந்துடன் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் இதனை தெரிவித்தார். இது ரசிகர்களைஉற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது
ரஜினியும், கமலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக நடித்து வந்தனர். 15க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
Related Tags :
Next Story






