60-வது பிறந்தநாள்- ஷாருக்கானை வாழ்த்திய கமல்

நடிகர் ஷாருக்கானுக்கு நடிகர் கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக அவரின் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகரான ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது, பதான் இயக்குநர் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். பிறந்த்நாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், “கேமரா, வசீகரம், புத்திசாலித்தனத்துடன் கிரீடம் தேவையற்ற ராஜாவுக்கு அவரின் இதயத்தைப்போல பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
‘ஜவான்’ திரைப்படம் மூலம் ஷாருக்கான் முதல் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.






