'கர்னூல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது' - ராஷ்மிகா மந்தனா

இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த 21 பேர் உயிரிழந்தனர்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த பயணிகளில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்னூல் சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
’கர்னூல் செய்தி என் இதயத்தை மிகவும் பாதித்தது. அந்த பேருந்தில் இருந்த பயணிகள் என்னவெல்லாம் அனுபவித்திருப்பார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. குழந்தைகள் உட்பட பலர் சில நிமிடங்களில் தங்கள் உயிரை இழந்ததை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்’ இவ்வாறு தெரிவித்திருக்கிரார்.
Related Tags :
Next Story






