'கதாபாத்திரங்களாக பாருங்கள்...'- சர்ச்சைக்கு மணிரத்னம் விளக்கம்


Mani Ratnam defends Kamal Haasan romancing 28-year-younger Trisha Krishnan in Thug Life
x

படத்தை பார்த்த பின்பு கருத்துகளை கூறுமாறு மணிரத்னம் வலியுறுத்தி இருக்கிறார்.

சென்னை,

"தக் லைப்" படத்தில், கமல்ஹாசனின் கதாபாத்திரம், திரிஷா மற்றும் அபிராமி இருவருக்கும் ஜோடியாக இருக்கும் வகையில் காணப்படுகிறது. கமல்ஹாசனுக்கும் இரு நடிகைகளுக்கும் கிட்டதட்ட 30 வயது இடைவெளி இருப்பதால், சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

டிரெய்லரில் காட்டப்பட்ட நெருக்கமான காட்சிகளே இந்த விவாதத்திற்கு காரணம். இந்நிலையில், படத்தை பார்த்த பின்பு கருத்துகளை கூறுமாறு மணிரத்னம் பார்வையாளர்களை வலியுறுத்தி இருக்கிறார்

அவர் கூறுகையில், 'நாம் அவ்வளவு விரைவாக எதையும் தீர்மானித்துவிடக்கூடாது. கமல் மற்றும் திரிஷாவை 'தக் லைப்' படத்தில் கமல் மற்றும் திரிஷாவாக இல்லாமல் கதாபாத்திரங்களாக பார்க்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தைப் பார்க்காமல் எதையும் மதிப்பிடாதீர்கள்" என்றார்

1 More update

Next Story