3-வது முறையாக மோடி பதவியேற்பது சாதனை - ரஜினிகாந்த் புகழாரம்


3-வது முறையாக மோடி பதவியேற்பது சாதனை - ரஜினிகாந்த் புகழாரம்
x
தினத்தந்தி 9 Jun 2024 9:06 AM IST (Updated: 9 Jun 2024 12:38 PM IST)
t-max-icont-min-icon

பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். பிரதமருடன் 30 மந்திரிகள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை என்றார்.


Next Story