"இந்தியக் கலை அடையாளங்களுள் ஒருவர்"- கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து


இந்தியக் கலை அடையாளங்களுள் ஒருவர்- கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து
x

நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

"உலக நாயகன்" என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம்தேதி பரமக்குடியில் பிறந்தார். 1960ம் ஆண்டு வெளியான"களத்தூர் கண்ணம்மா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7-ம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்து நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-

"இந்தியக்

கலைஅடையாளங்களுள் ஒருவர்

கலைஞானி கமல்ஹாசன்

கலையே வாழ்வாய்

வாழ்வே கலையாய்

மாறிப்போன மனிதர்

வாழ்வியல் புயல்களையும்

விமர்சனச்

சூறாவளிகளையும் தாண்டி

அவர் என்ன காரணங்களுக்காகக்

கொண்டாடப்படுகிறாரோ

அந்தக் காரணங்கள்

வாழ்வெல்லாம் நிலைத்திருக்க

வாழ்த்துகிறேன்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story