''ஆப் பீர் குடித்துவிட்டு அவர் ஆடிய ஆட்டம் இருக்கே''... ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை


Rajinikanths short story about Ilayaraja
x

இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் பேசும்போது, "ஜானி படப்பிடிப்பில் ஒரு சமயம் இயக்குனர் மகேந்திரன் மற்றும் இளையராஜா உடன் நான் அமர்ந்திருந்தேன். அப்போது சாமி சரக்கு அடிக்கலாமா...என்று கேட்டேன். சரி என்றார். ஆப் பீர் குடித்துவிட்டு அவர் ஆடிய ஆட்டம் இருக்கே...அய்யய்யோ...கதையையும், பாடலையும் மறந்து விட்டார்.

ஊரில் உள்ள கிசுகிசுக்களை பேச தொடங்கி விட்டார். குறிப்பாக ஹீரோயின்களை பற்றி பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றது. இன்னொரு மேடையில் சொல்கிறேன்’ என்று சிரித்தபடி ரஜினிகாந்த் கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

1 More update

Next Story