அல்லு அர்ஜுனை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ...காரணம் என்ன?

மும்பை விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
புஷ்பாவுக்குப் பிறகு உலகம் முழுவதும் அல்லு அர்ஜுன் பிரபலமாகி இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மாஸ்க் மற்றும் கண்ணாடியுடன் அல்லு அர்ஜுன் நுழைந்தபோது பாதுகாப்பு ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். மாஸ்க் மற்றும் கண்ணாடியை கழற்றி முகத்தைக் காட்டச் சொன்னார்கள்.
அவரது தனிப்பட்ட ஊழியர்கள் அவர் அல்லு அர்ஜுன் என்று சொன்னபோதும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய ஊழியர்கள் அவரை முகத்தைக் காட்டச் சொன்னார்கள். பின்னர் தனது மாஸ்க் மற்றும் கண்ணாடியைக் கழற்றி முகத்தைக் காட்டிவிட்டு அவர் உள்ளே சென்றார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நட்சத்திரங்களை பார்த்ததும் செல்பிக்காக மக்கள் கூடுவார்கள் என்பதால் மாஸ்க் அணிவது இயல்பாக இருப்பினும், விமான நிலையங்களில் உள்ள விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






