அல்லு அர்ஜுன் ஜாமீனில் தளர்வுகள் - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு


Some relaxations in Allu Arjuns bail - Court orders action
x

ஜாமீனில் சில தளர்வுகளை விதிக்குமாறு, அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்பு காட்சியின்போது. அல்லு அர்ஜுனை காண அதிகளவு ரசிகர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வழக்கில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு இரண்டு மாதங்களுக்கு அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரையில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.

இதனிடையே, ஜாமீனில் சில தளர்வுகளை விதிக்குமாறு, அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார். இதனடிப்படையில், நம்பள்ளி கோர்ட்டு சில தளர்வுகளை வழங்கி அதிரடி உத்தரவு ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி, இனி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், அல்லு அர்ஜுன் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story