பழனியில் சாமி தரிசனம் செய்த 'ஜனநாயகன்' பட இயக்குநர்


The director of the film Jananayagan had darshan of Lord murugan in Palani
x

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குநர் எச்.வினோத் வந்திருந்தார்.

திண்டுக்கல்,

'ஜனநாயகன்' பட இயக்குநர் எச்.வினோத், இயக்குநர் ரா. சரவணன் இணைந்து பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜய்யை வைத்து ’ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குநர் எச்.வினோத் வந்திருந்தார். இவருடன் நந்தன் பட இயக்குநர் ரா.சரவணனும் வந்திருந்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

1 More update

Next Story