தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த 'ஜனநாயகன்' படத்தின் 'பர்ஸ்ட் ரோர்'

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த 'ஜனநாயகன்' படத்தின் 'பர்ஸ்ட் ரோர்'
Published on

சென்னை,

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ''ஜன நாயகன்'' படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோவை) படக்குழு வெளியிட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பர்ஸ்ட் ரோர் வீடியோ வெளியான 24 மணிநேரத்தில் 32.4 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்றது. கிளிம்ஸ் வீடியோ வெளியாகி 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற முதல் தமிழ் படம் என்ற சாதனையை 'ஜனநாயகன்' படம் பெற்றுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜேடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லனாக பாபி தியேல் நடித்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com