'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
Published on

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் திரைப்படம் உருவாகி உள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலான 'கிஸ்ஸா 47' எனத் தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை கெளித்தி எழுத்துயுள்ளார். ஓப்ரா இசையமைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com