'பிகில்' நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த 'மேட் ஸ்கொயர்' பட டிரெய்லர் வெளியானது


பிகில் நடிகை சிறப்பு தோற்றத்தில் நடித்த மேட் ஸ்கொயர் பட டிரெய்லர் வெளியானது
x
தினத்தந்தி 27 March 2025 9:42 AM IST (Updated: 27 March 2025 9:54 AM IST)
t-max-icont-min-icon

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள 'மேட் ஸ்கொயர்' படம் 29-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'மேட்'. இது இவர் இயக்கிய முதல் படமாகும். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் 2-ம் பாகமான 'மேட் ஸ்கொயர்' உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. இதில், சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்த ரேபா மோனிகா நடனமாடி இருந்தார்.

நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story