''ஜனநாயகனில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்'' - இயக்குனர் எச்.வினோத்


We can expect all this in Jana Nayagan - Director H. Vinoth
x

''ஜனநாயகன்'' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

சென்னை,

ஒரு விழாவில் பேசிய இயக்குனர் எச்.வினோத் விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இது விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஒரு விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் எச்.வினோத் ஜனநாயகன் பட அப்டேட்டை பகிர்ந்துகொண்டார். இது விஜய் சாரின் பக்கா பேர்வெல் படமாக இருக்கும் எனவும், மாஸ் , கமர்சியல், ஆக்சன் இந்த மூன்றையும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறினார்.

1 More update

Next Story