“அரசன்” புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள் - அனிருத்தை பாராட்டிய சிம்பு


“அரசன்” புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள் - அனிருத்தை பாராட்டிய சிம்பு
x

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தை சிம்பு வாழ்த்தியிருக்கிறார்.

சென்னை,

சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்வலர்களிடமும் இந்தப் படம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று மாலை திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் புரோமோ திரையிடப்பட்டது. இயக்குநர் நெல்சனும் இந்த புரோமோவில் நடித்திருக்கிறார். இந்த புரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.‘அரசன்’ பட புரோமோவை ஜூனியர் என்டிஆர் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் புரோமோவை ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி. முதல்முறையாக என் அன்புக்குரிய சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் இணைந்திருக்கிறேன். நன்றிகள்” எனப் பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தன் எக்ஸ் பக்கத்தில், “என் அன்பான அனி, இறுதியாக நம் கூட்டணியும் நிறைவேறிவிட்டது. ‘அரசன்’ புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள். எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராக்ஸ்டார். கடவுள் ஆசிர்வதிப்பாராக” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


1 More update

Next Story