மீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்


மீன் வளர்ப்பிலும் வருமானம்பெறலாம்
x
தினத்தந்தி 31 July 2022 1:30 AM GMT (Updated: 31 July 2022 1:30 AM GMT)

அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு பெரிய இடம் தேவை இல்லை. வீட்டில் இதற்கென ஒரு அறையை ஒதுக்கினாலே போதுமானது. இனப்பெருக்க அடிப்படையில், குட்டிகளைப் போடும் மீன்களான கப்பீஸ், மோலி, பிளாட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், ஏஞ்சல், கவுராமி என அலங்கார மீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப சிறிய தொட்டிகள், கண்ணாடி கப், பவுல்களில் வளர்க்கலாம்.

ல்லூரியில் படிக்கும்போதே தொழில் தொடங்க நினைப்பவர்கள், இல்லத்தரசிகள் ஆகியவர்களுக்கு 'மீன் வளர்ப்பு' பொருத்தமான தேர்வாகும். அலங்கார வண்ண மீன்கள் மற்றும் உணவாக சாப்பிடும் மீன்கள் என இதில் இரண்டு வகை இருக்கிறது. குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து, நிறைவான வருமானம் ஈட்டலாம். அவற்றுக்கான ஆலோசனைகள் இங்கே…

அலங்கார வண்ண மீன்கள்:

அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு பெரிய இடம் தேவை இல்லை. வீட்டில் இதற்கென ஒரு அறையை ஒதுக்கினாலே போதுமானது. இனப்பெருக்க அடிப்படையில், குட்டிகளைப் போடும் மீன்களான கப்பீஸ், மோலி, பிளாட்டி, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கும் பொன்மீன், டெட்ரா, பார்ப்ஸ், டேனியோஸ், ஏஞ்சல், கவுராமி என அலங்கார மீன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மீன்களின் வகைகளுக்கு ஏற்ப சிறிய தொட்டிகள், கண்ணாடி கப், பவுல்களில் வளர்க்கலாம்.

அலங்கார மீன்களுடன் சேர்த்து, மீன் தொட்டிக்குள் வளர்க்கப்படும் நீர்த்தாவரங்களையும் வளர்த்து விற்கலாம். நீர்த்தாவரங்கள் மீன் தொட்டிக்கு அழகு சேர்ப்பதுடன் மீன்களுக்கு உணவாகவும், அவற்றுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவும் வழிவகுக்கும். ஹைடிரில்லா, கபோம்பா, பொட்டோ மேஹிடான், செரட்டோபில்லம், நாஜாஸ், வேலம்பாசி போன்ற நீர்த்தாவரங்கள் மீன் வளர்ப்புக்கு நன்மை சேர்ப்பவை. இவற்றை பராமரிப்பதும் சுலபம்.

நீங்கள் வளர்க்கும் மீன்களின் வகைகளுக்கு ஏற்ப அதற்கான உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அலங்கார மீன்களில், சில மீன்கள் தனியாக வளர்க்கும் வகையில் இருக்கும். பீட்டா, பைட்டர், புளோரான் போன்றவற்றை தேர்வு செய்வது சிறந்தது. இவற்றுக்கென தனி உணவுப் பட்டியல் மற்றும் தண்ணீர் அமைப்பு இருக்கும். ஆகையால் மீனின் வாழ்நாளும், வளர்ச்சியும் அதிகரிக்கும். இவற்றை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விற்பனை செய்யலாம்.

உணவுக்காக வளர்க்கப்படும் மீன்கள்:

இந்த வகை மீன் வளர்ப்புக்கு மணல், வண்டல் மண், களிமண் கலந்த குளம் இருந்தால் நல்லது. அவ்வாறு அமைக்கும் வசதி இல்லாதவர்கள் பயோ பிளாக் தொழில் நுட்பம் மூலமாக, குறைந்த இடத்திலேயே தொட்டி அமைத்து மீன் வளர்க்கலாம். இம்முறையில் ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு, 40 கிலோ அளவு வரை மீன்களை வளர்க்க முடியும். இவ்வகைத் தொட்டிகள் 6 ஆண்டுகள் வரை பலன் தரும். மீன்களை உணவுக்காக வளர்க்கும்போது, ஒவ்வொரு வகைக்கும் தனி தொட்டிகளை ஒதுக்குவது நல்லது. இது மீன்கள் நன்றாக வளர்வதற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது தனியாக வைத்து பார்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.

இவற்றுக்கு டேப்னியா, இன்புசோரியா, டியூபிபெக்ஸ், மண்புழு, கொசுப்புழு, ரோட்டிபர் ஆர்டிமியா போன்ற உயிர் உணவுகளையும், அரிசித் தவிடு, கடலைப் புண்ணாக்கு, மீன் தூள், இறால் தலைத்தூள், கிழங்கு மாவு போன்ற உலர் உணவுகளையும் கொடுக்கலாம்.

இந்த வகை மீன்களை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்யலாம். மீன்களின் வகை மற்றும் வளர்ச்சியைப் பொறுத்து அவற்றின் விற்பனை காலத்தை நிர்ணயிக்கலாம். உணவுக்காக வளர்க்கப்படும் மீன்கள் ஆறு மாத காலங்களில் விற்பனைக்கு தயாராகிவிடும்.


Next Story