உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்


உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
x
தினத்தந்தி 24 July 2022 1:30 AM GMT (Updated: 24 July 2022 1:30 AM GMT)

மனிதன் உள்பட, உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும்.

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்கள் இருந்தாலும் மனிதனும், மற்ற உயிரினங்களும் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்கள் நிறைந்தது பூமி மட்டுமே. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்று இருக்கும் இதே நேரத்தில், நமது தேவைகளுக்காக இயற்கை வளங்களை அழிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நவீனமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. இதன்காரணமாக, உலகின் பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 1948-ம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூலை 28-ந் தேதி 'உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதன் உள்பட, உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். வருங்கால தலைமுறைக்கு தொழில்நுட்பம், பொருட்செல்வம் ஆகியவற்றைவிட, இயற்கை வளங்களையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் விட்டுச்செல்வதே சிறந்தது.


Next Story