உருளைக்கிழங்கு முறுக்கு


உருளைக்கிழங்கு முறுக்கு
x
தினத்தந்தி 1 Oct 2023 1:30 AM GMT (Updated: 1 Oct 2023 1:30 AM GMT)

சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு, மரவள்ளிக்கிழங்கு முறுக்கு ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

ருளைக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 2 கப்

உளுந்து - 2 கப்

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

உருளைக்கிழங்கு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

உரலில் மிளகைப் போட்டு பாதியாக உடைத்துக்கொள்ளவும். உளுந்தை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும். அது ஆறிய பின்பு உலர்ந்த மாவாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பின்பு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். முறுக்கு அச்சின் உட்புறம் நெய் அல்லது எண்ணெய் பூசவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு, முறுக்காக பிழிந்து எண்ணெய்யில் போட்டு சிவக்கும் அளவிற்கு பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான 'உருளைக்கிழங்கு முறுக்கு' தயார்.

மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - ½ கிலோ

பச்சரிசி மாவு - ¾ கிலோ

இஞ்சி - 1 அங்குல துண்டு

பச்சை மிளகாய் - 10

ஓமம் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

வெண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கி துருவிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். அதன் பின்பு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப் போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். இப்போது மொறுமொறுப்பான 'மரவள்ளிக்கிழங்கு முறுக்கு' தயார்.

குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது, மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.


Next Story