வலிகளை குறைக்க உதவும் 'ஹாட், ஐஸ் பேக்' பயன்பாடு


வலிகளை குறைக்க உதவும் ஹாட், ஐஸ் பேக் பயன்பாடு
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

சதை மற்றும் நரம்புகளில் வீக்கம், அதன் விளைவாக ஏற்படும் வலி ஆகியவற்றுக்கு ஹாட்பேக்கை விட, ஐஸ்பேக் சிறந்த தீர்வை தரும். ஐஸ் கட்டி ஒத்தடம், கூலன்ட் ஸ்பிரே போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

டுப்பு, முதுகு வலி மற்றும் அதிக உடல் எடை காரணமாக மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் தற்போது பொதுவானவையாக மாறிவிட்டன. இவற்றுக்கு சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தடம் அளிப்பது சிறந்த தீர்வாக அமையும். அதற்குப் பயன்படுத்தப்படுபவை தான் ஹாட் பேக் மற்றும் ஐஸ் பேக் (சூடு அல்லது குளிர்ச்சிப்படுத்தக்கூடிய ஜெல் மற்றும் திரவங்கள் நிரம்பிய சிறிய பை).

இன்றைய சூழ்நிலையில் பலரது வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் 'ஐஸ்பேக்' இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும் இது அதிகம் தேவைப்படும் ஐஸ்பேக்கைப்போல், ஹாட் பேக்கும் பயன்தரக்கூடியதுதான்.

நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இவ்விரண்டு பேக்கையும் பயன்படுத்துவதற்கு முன்பு, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது. ஹாட் பேக் பயன்படுத்தும்போது மிதமான சூட்டில் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து பயன்படுத்தவேண்டும்.

இவ்விரண்டில் எதை, எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கலாம். அதற்கான ஆலோசனைகள் இதோ…

சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம், எதுவாக இருந்தாலும் உள்காயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூடான ஒத்தடம் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும், குளிர்ந்த ஒத்தடம் ரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.

உதாரணத்திற்கு நரம்பு அல்லது சதைப் பகுதியை தளர்வடையச் செய்வதற்கு சூடான ஒத்தடத்தையும், வீக்கம் காரணமாக நரம்புகளில் ஏற்படும் வலி உணர்வைக் குறைப்பதற்குக் குளிர்ந்த ஒத்தடத்தையும் பயன்படுத்த வேண்டும்.

ஹாட் பேக்:

அந்தக் காலத்தில் ரத்தக்கட்டு அல்லது உள்காயம் போன்றவற்றுக்கு மணல் அல்லது உப்புக்கல்லை வறுத்து ஒத்தடம் கொடுத்து வந்தனர். இதை சுலபமாக்க இப்போது 'ரெடி மேட் ஹீட்டிங் பேட்கள்' விற்கப்படுகின்றன.

சூடான தண்ணீரில், பருத்தித் துணியை நனைத்துப் பிழிந்து அல்லது சுடுநீரை ஒரு பாட்டிலில் ஊற்றியும் அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். உடல் முழுவதும் வலி இருந்தால் சூடான நீரில் குளிக்கலாம் அல்லது குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் சுடுநீரில் மூழ்க வைக்கலாம்.

ஐஸ்பேக்:

சதை மற்றும் நரம்புகளில் வீக்கம், அதன் விளைவாக ஏற்படும் வலி ஆகியவற்றுக்கு ஹாட்பேக்கை விட, ஐஸ்பேக் சிறந்த தீர்வை தரும். ஐஸ் கட்டி ஒத்தடம், கூலன்ட் ஸ்பிரே போன்றவற்றையும் பயன்படுத்தலாம். நரம்புக் கோளாறு, ரத்த ஓட்டம் குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி இதை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐஸ்பேக் உபயோகிக்கும் போது குறைவான நேரம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

ஹாட் பேக், ஐஸ் பேக் இரண்ைடயுமே முதல் உதவிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ன செய்தாலும் வலி குறையவில்லை அல்லது வெகுநாள் நீடிக்கிறது என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.


Next Story