பிரபலமாகும் மைக்ரோ பிளேடிங்


பிரபலமாகும் மைக்ரோ பிளேடிங்
x
தினத்தந்தி 6 Nov 2022 1:30 AM GMT (Updated: 6 Nov 2022 1:31 AM GMT)

பேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் என நீண்டு கொண்டே போகும் பெண்களுக்கான அழகு அலங்காரங்களின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கும் ‘மைக்ரோ பிளேடிங்’ பற்றி விளக்குகிறார் சென்னையில் வசிக்கும் அழகுக்கலை நிபுணர் ஜெயசுதா.

புருவங்கள் பெண்களின் முக அழகை மேலும் அதிகரித்து காட்டுபவை. சில பெண்களுக்கு புருவங்கள் அடர்த்தி இல்லாமல் ஆங்காங்கே முடிகள் உதிர்ந்து மெல்லியதாக இருக்கும். அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது பல அழகு நிலையங்களில் செய்யப்படும் அலங்கார முறைதான் 'மைக்ரோ பிளேடிங்'.

பேசியல், பெடிக்யூர், மெனிக்யூர் என நீண்டு கொண்டே போகும் பெண்களுக்கான அழகு அலங்காரங்களின் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருக்கும் 'மைக்ரோ பிளேடிங்' பற்றி விளக்குகிறார் சென்னையில் வசிக்கும் அழகுக்கலை நிபுணர் ஜெயசுதா.

"மைக்ரோ பிளேடிங் என்பது புருவத்திற்கு மேலும் அழகைக் கூட்டும் அல்லது புருவத்தை சீர்படுத்தும் அலங்கார முறையாகும். புருவம் வளராமல் இருப்பது, மெல்லியதாக இருப்பது, புருவத்தில் ஆங்காங்கே முடிகள் உதிர்ந்து இருப்பது போன்ற பிரச்சினைகளுக்கு 'மைக்ரோ பிளேடிங்' சிறந்த தீர்வாக அமையும்".

மைக்ரோ பிளேடிங் எப்படி செய்யப்படுகிறது?

இந்த முறையில் ஒரு விதமான செயற்கை மை கொண்டு புருவங்களை விருப்பமான வடிவத்தில் அமைப்போம். முதலில் புருவத்தை வாடிக்கையாளரின் விருப்பப்படி வளைவான வடிவத்தில் வரைந்து கொள்வோம். பின்பு அதில் பிரத்தியேக மை நிரப்பப்பட்ட கருவி கொண்டு நிஜ முடிகள் போல உருவாக்குவோம். இதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். புருவ முடியின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை நேரம் மாறுபடும்.

இவ்வாறு வரைந்துகொண்ட மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை புருவங்களில் அடத்தியான 'மை திட்டுக்கள்' தெரிவது போல் தோன்றும். பின்பு இயற்கையான நிறம் மற்றும் தோற்றத்துக்கு மாறிவிடும்.

இதில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

'மைக்ரோ பிளேடிங்' முறையில் 'டிண்ட்' எனும் தற்காலிக அலங்காரம் மற்றும் நிரந்தர அலங்காரம் என இரண்டு வகைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குத் தகுந்தது போல் ரசாயனம் அல்லது இயற்கை மை கொண்டு புருவங்களை அமைக்கிறோம்.

இந்த வகை புருவ அலங்காரம் எவ்வளவு காலம் நீடித்து இருக்கும்?

தற்காலிக அலங்காரம் ஒரு மாதம் அல்லது மூன்று வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது. பராமரிக்கும் விதத்தைப் பொறுத்து அதன் ஆயுட்காலம் இருக்கும். நிரந்தர அலங்காரம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும். முறையாகப் பராமரித்தால் இது மேலும் நீளக்கூடும். 'மைக்ரோ பிளேடிங்' செய்து கொண்ட பிறகு புருவத்திற்கு மை, பென்சில் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை.

விசேஷ பராமரிப்பு ஏதேனும் உண்டா?

'மைக்ரோ பிளேடிங்' செய்து கொண்ட பின்பு புருவத்தில் எண்ணெய் தடவக்கூடாது. முகத்திற்கு சோப்பு, கிரீம் பூசும்போது, பேசியல் செய்யும்போது புருவத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.

இதனால் சரும பாதிப்புகள் ஏற்படுமா?

ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு 'மைக்ரோ பிளேடிங்' செய்து கொள்வது நல்லது.


Next Story