சிறிய பட்ஜெட்டில் 'ஸ்மார்ட்' வீடு


சிறிய பட்ஜெட்டில் ஸ்மார்ட் வீடு
x
தினத்தந்தி 22 Jan 2023 1:30 AM GMT (Updated: 22 Jan 2023 1:30 AM GMT)

வீட்டில் உள்ள இடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மின்விளக்குகளை அமைப்பதன் மூலம், வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதற்காக சுவர் விளக்கு முதல் தரை விளக்கு வரை பல ரகங்கள் உள்ளன.

சிக்கும் வீட்டை நவீனமாகவும், புதுப்பொலிவோடும் மாற்றி அமைக்க விரும்புபவர்கள், ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் சிறிய பட்ஜெட்டிலேயே அதை சாத்தியமாக்கலாம். அதற்கான சில ஆலோசனைகள்:

புதிய வண்ணப்பூச்சு:

வீட்டைப் புதுப்பிக்க எளிய வழி, புதிய கோட்டிங் பெயிண்ட் பூசுவதுதான். இந்த பெயிண்ட் பூச்சு, வீட்டிற்குப் புதுப்பொலிவையும், அழகையும் தருவதுடன், வாழ்க்கைச் சூழலையும் மாற்றும். இயற்கை காரணிகள், பூஞ்சை பாதிப்பு ஏற்படாத வகையில் கவசமாகவும் செயல்படும். நீங்கள் தேர்வு செய்யும் நிறம், வீட்டின் தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டாமல் இருக்க வேண்டும்.

பெயிண்ட்டிங் மட்டுமில்லாமல், வால் ஸ்டிக்கர்களும் பல நிறங்கள், வடிவங்கள், டிசைன்களில் கிடைக்கின்றன. வண்ணம் பூசுவதை விட இவற்றுக்குக் குறைந்த செலவே ஆகும். எந்த நேரத்திலும், சுவரில் இருந்து பிரித்து எடுத்து மற்றொரு ஸ்டிக்கரை ஒட்டலாம்.

மின் விளக்குகள்:

வீட்டில் ஒளி நிறைந்து இருக்கும்போது, புதுப்பொலிவு உண்டாகும். மங்கலான வெளிச்சத்தை விட, பிரகாசமான ஒளி வீட்டை நேர்த்தியாகவும், கம்பீரமாகவும் மாற்றும். வீட்டில் உள்ள இடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மின்விளக்குகளை அமைப்பதன் மூலம், வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதற்காக சுவர் விளக்கு முதல் தரை விளக்கு வரை பல ரகங்கள் உள்ளன.

வீட்டிற்கு கம்பீர தோற்றத்தைக் கொடுக்க, சர விளக்குகள் பொருத்தலாம். திறந்தவெளிக்கு சீரியல் பல்புகள், தொங்கும் வகையிலான விளக்குகளைத் தேர்வு செய்யலாம். இவை பல வடிவங்கள், ரகங்களில் கிடைக்கின்றன. இது வீட்டிற்குப் புதிய பொலிவு தரும்.

கைவினை அலங்காரங்கள்:

வீட்டில் இடவசதி குறைவாக இருந்தால், அதை மேம்படுத்திக் காட்ட சுவர்களை அலங்கரிக்கலாம். இதற்கு சுவர் ஓவியங்கள், ஸ்டிக்கர்கள், வித்தியாசமான கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன்மூலம், வீட்டின் ஒவ்வொரு அறையும் அழகானதாக மாறும். இதற்கு குறைந்த தொகையைச் செலவிட்டாலே போதும்.

படுக்கை அறையைச் சுற்றி சுவர் ஓவியங்களைத் தொங்க விட்டால், அதன் அழகு மேலும் அதிகரிக்கும்.

சுவிட்சுகள் மற்றும் பிரேம்களை மாற்றுதல்:

வீட்டின் அழகை எடுத்துக்காட்டும்படி நேர்த்தியான ரகங்களில், விதவிதமாக சுவிட்சுகள் கிடைக்கின்றன. உங்களுக்கு விருப்பமான சுவிட்சுகள் மற்றும் பிரேம்களைத் தேர்வு செய்யலாம்.

இவற்றுக்கென பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை வீட்டிற்கு நவீன தோற்றத்தைத் தரும்.


Next Story