திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்


திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
x

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 6-ம் தேதி கருட வாகன சேவை நடைபெறுகிறது.

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வரும் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் (துவஜாரோகணம்) இன்று நடைபெற்றது. வைகானச ஆகம விதிகளின்படி, வேத மந்திரங்கள் முழங்க, காலை 7.02 மணி முதல் 7.20 மணிக்குள், கருடாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் காலை 10 மணி முதல் 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

கொடியேற்ற வைபத்தில் திருமலையின் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை செயல் அலுவலர் வி.ஆர்.சாந்தி, கூடுதல் செயல் அலுவலர் முனிகிருஷ்ணா ரெட்டி மற்றும் பிற கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 6-ம் தேதி கருட வாகன சேவை, ஜூன் 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 10-ம் தேதி சக்கர ஸ்னானம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

1 More update

Next Story