திருப்பதியில் அலைமோதும் கூட்டம்; இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்


திருப்பதியில் அலைமோதும் கூட்டம்; இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
x

ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், விடுமுறை தினங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், தற்போது சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் இன்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இலவச தரிசனத்தில் 24 மணி நேரமாக சுமார் 4 கி.மீ. வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதே போல் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். இதனிடையே, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அங்குள்ள மண்டபங்களில் தங்கிவிட்டு நாளை காலை தரிசனம் செய்ய வரலாம் என தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

1 More update

Next Story