திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்


திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்
x

அமாவாசை யாகத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே அனுமந்த நகர் ராஜலட்சுமி நகரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஜப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு, உலக மக்களின் நன்மை மற்றும் தொழில் வளர்ச்சி வேண்டி நிகும்பலா யாகம் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து மகா சபா தேசிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story