அரசம்பாளையம் பட்டாலி மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

திருவிழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட அரசம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற 1400 வருடம் பழமைமிக்க பட்டாலி மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருவிழா துவங்கி கம்பம் சாட்டப்பட்டது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் 19ஆம் நாளான இன்று புதன்கிழமை காலை 4 மணி அளவில் மாவிளக்கு எடுத்தல், 7 மணிக்கு பூவோடு எடுத்தல் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவின் இறுதி நாளான நாளை (வியாழக்கிழமை) மறுபூஜையும், சுவாமி திருவீதியுலா வருகையும் நடைபெற்று, மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடையும்.
Related Tags :
Next Story






