திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருமலைக்கேணி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் உண்ணாமலை அம்பாள் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com