‘இலவச ஆன்மிக பயணம்’: திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட மூத்த குடிமக்கள்


‘இலவச ஆன்மிக பயணம்’: திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட மூத்த குடிமக்கள்
x

அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப் பயணத்தை திருச்செந்தூர் கோவில் தக்கார் அருள் முருகன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி 60 வயது முதல் 70 வயது வரை உள்ள 2 ஆயிரம் முதியோர்கள் (பக்தர்கள்) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை இலவச ஆன்மிக பயணத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

அவ்வகையில் திருச்செந்தூரில் இருந்து 6 சொகுசு பஸ்களில் 200 பேர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு செல்லும் ஆன்மீக சுற்றுப்பயணத்தை தொடங்கினர். கோவில் தக்கார் அருள்முருகன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கு உணவு வசதி, தங்குமிடம், சோப்பு, எண்ணெய், பெட்ஷீட், பல்பொடி உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து தொடங்கிய இந்த குழுவினர் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய கோவில்களில் தரிசனத்தை முடித்துவிட்டு 14-ந் தேதி திருச்செந்தூர் திரும்புகின்றனர்.

ஆன்மிக பயண தொடக்க நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ராமு, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story