திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு


திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
x

திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெற்றது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. கோவில் அருகில் உள்ள புண்ணியத் தீர்த்தமான ஸ்ரீவாரி புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் பகவான் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை தெப்போற்சவம் நடைபெற்றது.

முதல் நாளில் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2-வது நாளில் கிருஷ்ணர், ருக்மணி தேவி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன்பின்னர் மூன்றாவது நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்தார். நான்காவது நாளான நேற்று 5 சுற்றுகள் பவனி வந்தனர். தெப்போற்சவத்தின் நிறைவு நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்துடன் தெப்போற்சவம் நிறைவுபெற்றது. தெப்போற்சவ நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story