விழுப்புரம்: வீரங்கிபுரம் அய்யனார் கோவில் தேர் திருவிழா


விழுப்புரம்: வீரங்கிபுரம் அய்யனார் கோவில் தேர் திருவிழா
x

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தில் அய்யனார், பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஊரணி பொங்கல் வைத்தல் மற்றும் கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு மூலவர் அய்யனார், பிடாரியம்மன் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யனார், பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளியதும், தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

இத்தேர், வீரங்கிபுரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அதன் பிறகு சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story