உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி


உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி
x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றிபெற்றது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் நேற்று நள்ளிரவில் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் அர்ஜெண்டீனா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.

முன்னதாக சவுதி அரேபியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த இரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல் மெக்சிகோ அணி, போலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் டிரா செய்திருந்தது.

இந்த சூழலில் பரபரபாக தொடங்கிய இன்று ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அப்போது அர்ஜெடீணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்தனர்.

இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டீனா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் கோல்கள் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.


Next Story