உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்..!!


உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்..!!
x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தியது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள கலிபா இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.

பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் வீரர் அல்வோரா மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்படி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 48-வது நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் ரிட்சு டோன் தனது அணிக்கான முதல் கோலை அடித்து போட்டியை சமன் பெறச் செய்தார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஆவ் டனாகா இரண்டாவது கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தியது.

இதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறி உள்ளது.

1 More update

Next Story