அருண் நேருவிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை

திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கே.என்.நேருவின் சகோதர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்டவிரோத பண பரிமாற்றம், சிபிஐ வழக்கு தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ரவிச்சந்திரனிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்த அதிகாரிகள் அவற்றை வீடியோகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கே.என்.ரவிச்சந்திரன், எம்.பி.,அருண் நேரு ஆகியோரிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கேன்.என்.நேரு உறவினர் வீடுகளில் நடந்த சோதனையிலும் பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன. திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவிலான ஹவாலா பரிவர்த்தனை நடந்துள்ளது. டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






