சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?


சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 7 March 2025 10:15 AM IST (Updated: 7 March 2025 11:30 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது.

நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து இருந்தது. அதன்படி, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் ஏறி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.


Next Story