சற்று குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?


சற்று குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
x
தினத்தந்தி 21 Feb 2025 9:52 AM IST (Updated: 22 Feb 2025 9:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 64,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ. 8,025-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 50 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7,360 ரூபாய் அதிகரிப்பு; இவ்வளவு குறுகிய நாட்களில், தங்கம் விலை இந்தளவுக்கு அதிகமாக அதிகரித்தது, இதுவே முதல் முறையாகும்.

1 More update

Next Story