கார்பன் வரி விதித்தால் பதிலடி: இங்கிலாந்துக்கு இந்தியா எச்சரிக்கை

இங்கிலாந்தின் கார்பன் வரி இந்திய ஏற்றுமதியை பாதித்தால், இந்தியா பதிலடி கொடுக்கும்.
2027-ம் ஆண்டில் இருந்து கார்பன் வரிவிதிப்பை அமல்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து அரசு முடிவு எடுத்தது. அந்த வரியை அமல்படுத்தினால், இங்கிலாந்துக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் இரும்பு, எக்கு, அலுமினியம், உரம், சிமெண்டு ஆகியவற்றுக்கு கார்பன் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இதன்மூலம் இங்கிலாந்துக்கான 77 கோடியே 50 லட்சம் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, இங்கிலாந்தின் கார்பன் வரி இந்திய ஏற்றுமதியை பாதித்தால், இந்தியா பதிலடி கொடுக்கும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






