ஜனவரியில் ஏற்றுமதி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு: இந்தியாவின் வர்த்தக நிலவரம்


ஜனவரியில் ஏற்றுமதி குறைவு, இறக்குமதி அதிகரிப்பு: இந்தியாவின் வர்த்தக நிலவரம்
x
தினத்தந்தி 17 Feb 2025 3:20 PM IST (Updated: 17 Feb 2025 3:33 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு இன்று வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியானது கடந்த மாதத்தில் (ஜனவரி) 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 37.32 பில்லியன் டாலர்களாக இருந்தது.

அதேசமயம் கடந்த மாதம் இறக்குமதி அதிகரித்தள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 53.88 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் டாலர்களாக உள்ளது.

கடந்த மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை, அல்லது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான இடைவெளியானது 22.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியானது 1.39 சதவீதம் அதிகரித்து, 358.91 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 7.43 சதவீதம் அதிகரித்து 601.9 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story