ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் கடிதம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக புகார்

தேர்தல் கமிஷனின் புகழுக்கு களங்கம் விளைவிக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாகவும் கூறியுள்ளனர்.
ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் கடிதம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக புகார்
Published on

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரசுக்கு எதிராக 16 நீதிபதிகள், 123 ஓய்வுபெற்ற அதிகாரிகள், 14 முன்னாள் தூதர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் என 272 பேர் வெளிப்படையாக குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் தேர்தல் கமிஷன் உள்ளிட்ட அரசியல் சாசன நிறுவனங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், நேர்மையான மாற்று கொள்கைகளை தெரிவிப்பதற்கு பதிலாக விஷமத்தனமான சொல்லாடலை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய பாதுகாப்பு படைகளின் வீரத்தை கேள்வி எழுப்பியது, நீதித்துறை மீது கேள்வி எழுப்பியது, நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சாசன நிறுவனங்களின் செயல்பாட்டை கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது தேர்தல் கமிஷனின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com