பைக் மீது கார் மோதி கோர விபத்து; 4 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ

இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பல்கல்கஞ்ச் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் காலை 10 மணியளவில் நண்பர்கள் 4 பேர் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கோரக்பூர் - வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் , பைக் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தலைமறைவாக உள்ளார். விபத்தில் உயிரிழந்த 4 பேரும் நண்பர்கள் ஆவர். இதில் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.






