சிவில் விமான போக்குவரத்துத்துறையில் 4,300 பதவிகள் காலி - மத்திய அரசு தகவல்


சிவில் விமான போக்குவரத்துத்துறையில் 4,300 பதவிகள் காலி - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 22 July 2025 7:50 AM IST (Updated: 22 July 2025 1:44 PM IST)
t-max-icont-min-icon

சிவில் விமான போக்குவரத்துத்துறையில் 4,300 பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பதவிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி கூறுகையில், நாட்டில் சிவில் விமான போக்குவரத்தை நெறிப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிறுவனங்களாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் இந்திய விமானநிலைய ஆணையம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள், அலுவலர்கள் என மொத்தம் 4,291 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இருப்பினும் இந்த காலிப்பணியிடங்கள் காரணமாக விமான போக்குவரத்து செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறினார்.

1 More update

Next Story