பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து நடைபெற்றுள்ளது. இந்த கஞ்சா விருந்தில் அதே கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து அறிந்த போதைப்பொருள் தடுப்பு போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தினர். இதில், 6 மாணவ, மாணவியர் கஞ்சா விருந்தில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






