பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்; அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டியை அடித்துக்கொன்ற பேரன்; அதிர்ச்சி சம்பவம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜொகி பகுதியை சேர்ந்த இளைஞர் ராம்தாஸ் (வயது 28). இவரது பாட்டி பஞ்புலா ராம்கிஷன் (வயது 68). இதனிடையே, ராம்தாஸ் கடந்த ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்த பாட்டி ராம்கிஷனை மனநலம் பாதிக்கப்பட்ட பேரன் ராம்தாஸ் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராம்கிஷனை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பாட்டி ராம்கிஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராம்தாஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com